Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எல்லோரா » ஈர்க்கும் இடங்கள் » பிராமணிய குகைக் கோயில்கள்

பிராமணிய குகைக் கோயில்கள், எல்லோரா

33

 

 

குகை 13

இந்த குகைக்கு பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லை.

குகை 14

இந்த குகை ராவன் கி கை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதன் பெயர் காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை. இக்குகைக்கோயிலின் நடைபாதை சதுர வடிவில் மக்கள் வலம் வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயிலின் சுவர்களில் வைஷ்ணவ நம்பிக்கை சார்ந்த உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மற்ற சுவர்களில் பெண் தெய்வங்களான கஜலக்ஷ்மி மற்றும் துர்க்கை அம்மனின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு மிகப்பெரிய முற்றத்தையும் நீங்கள் காணலாம். இந்த முற்றத்திலிருந்து 4 சுரங்கப்பாதைகள் ஹிந்து குகைகளுக்கு செல்கின்றன. அதோடு முற்றத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது.

குகை 15

இந்த குகை விஷ்ணு பகவானுடைய பத்து அவதாரங்களையும் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமே ஒரே கல்லாலான சிற்பங்களை நீங்கள் காண முடியும்.

அதோடு இங்குள்ள இரண்டடுக்கு மண்டபம் ஒன்றில், இவ்விடத்தை ஆட்சி செய்த பேரரசுகளின் பெயர்கள் காலவரிசைப்படி பொறிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இங்கு காணப்படும் குறிப்புகளில் பாதி புத்த குறிப்புகளாகவும், மீதி பாதி இந்து-பிராமணிய குறிப்புகளாகவும் உள்ளன.

குகை 16

இந்த குகைதான் உலகத்தில் உள்ள குடைவறைக்கோயில்களிலேயே மிகவும் பெரியது. இக்குகைக்கோயில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் கட்டப்பட்டுள்ளது.

இது கைலாய வாசியான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால் கைலாஷ் என்றே அழைக்கப்படுகிறது. அதோடு இந்த கோயிலின் வடிவமைப்பு சாளுக்ய பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட விருபாக்ஷா கோயிலை ஒத்தது போல் இருக்கும்.

இந்தக் குகைக்கோயில், நுழைவாயில், சிவன் கோயில், நந்தி கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள துறவி மடங்கள் என்று பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் தொல்பொருள் துறை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஏராளமான செய்திகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

இங்கு காணப்படும் கோயிலும், மண்டபமும், சிறப்பு வாய்ந்த சிற்பங்களும், குறிப்புகளும், வசீகரமான தூண்களும் என்று அனைத்துமே ஒரே கல்லால் உருவாக்கப்பட்டவை.

குகை 21

இராமேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த குகைக்கோயில் இங்குள்ள குகைகளிலேயே மிகவும் தொன்மையானது. இங்குள்ள ஹிந்து தெய்வங்களின் சிற்பங்கள், அவைகளின் தனித்துவமான வடிவமைப்புக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.அதோடு இந்த குகையும் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதுதான்.

அதுமட்டுமல்லாமல் மற்ற குகைகளில் இருப்பது போன்றே இங்கும் ஒரு மண்டபம் இருக்கிறது. இதன் சுவர்களில் பெண் தெய்வங்களான கங்கா மற்றும் யமுனாவின் உருவங்களும், கல்யாண கோலத்தில் சிவனும், பார்வதியும் இருப்பது போன்ற சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த குகைக்கோயிலின் விசாலமான வடிவமைப்பு பிரசத்க்ஷ்ணம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

குகை 29

துமர் லேனா என்று அழைக்கப்படும் இந்த குகை சீதா கா நஹாணி எனும் குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. இந்த குகைக்கோயில் தனித்து இருப்பதாலும், இங்குள்ள பெரிய சிவலிங்கத்துக்காகவும் பயணிகளிடையே பிரபலம்.

இதன் அரங்கத்தில் வாயில் காவலர்களாக நான்கு துவாரபாலகர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகை மும்பை அருகே கண்டறியப்பட்ட யானை குகைகளை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat