குகை 30
இந்த குகைக்கோயில் பதினாறாம் குகையான இந்து குகைக் கோயிலை பார்த்து அதை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதால் சோட்டா கைலாஷ் என்று அழைக்கப்படுகிறது.இது கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இங்கு அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற அறிய மகாவீரர் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
குகை 32
இந்த குகைக்கோயில் இந்திரனின் ஆலோசனை சபை என்ற அர்த்தத்தில் இந்திர சபா என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு தளங்களை கொண்டதுடன், அதன் வாயில் ஒரு சிறிய மன்றத்தை சென்று அடைகிறது.
இங்குள்ள மனஸ்தம்பா என்ற ஓரே கல்லாலான கோயிலும், அதனருகில் உள்ள ஓரே கல்லாலான யானையும் காண்போரை எளிதில் கவர்ந்துவிடும்.
குகை 33
ஜகன்னாத் சபா என்று அழைக்கப்படும் இந்த குகை அதன் முந்தைய குகையின் நீட்டிப்பாகவே அறியப்படுகிறது. இங்கும் ஏராளமான சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications