தமிழ் நாட்டிலுள்ள புகழ் பெற்ற பழமையான சர்ச்சுகளில் ஒன்று ப்ரோ சர்ச் ஆகும். ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி வாட்சம் ப்ரோ என்பவரால் இந்த வழிபாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இந்நகர மக்களுக்காக அவர் அரும்பெரும் சேவைகளையும் செய்துள்ளார். இந்த சர்ச்சின் நிர்வாகிகள் பொதுமக்களின் தேவைக்கான சில அறப்பணிகளையும் செய்து வருகின்றனர்.
1928-29-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம், ஈரோடு நகரின் மையத்திலுள்ள பன்னீர் செல்வம் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் இந்த சர்ச்சின் தூண்களையும், தளத்தையும் நிர்வாகிகள் புணரமைத்துள்ளனர்.
இதன் மூலம் கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம்களையும் ஈர்க்க முடியும் என இதைக் கட்டியவர்கள் நினைத்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த புனிதத்தலத்திற்கு வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications