காங்க்டாக் நகரத்தில் உள்ள தி ரிட்ஜ் எனப்படும் சமதளமான பீடபூமிப்பகுதி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி கூடும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. நம்கியால் ராஜ வம்ச அரண்மனையின் வாயிற்பகுதியில் துவங்கி வொயிட் ஹால் மாளிகை இந்த பீடபூமி நீண்டுள்ளது.
இந்த ரிட்ஜ் பகுதியில் ஒரு அழகிய பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஹவா ஹர் பகுதியில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணிகள் இயற்கைச்சூழலை ரசிக்கலாம். பயணிகளின் உடனடி புகைப்படங்களை எடுத்துத்தரும் புகைப்படக்காரர்களும் இங்கு அதிகம் கிடைக்கின்றனர்.
ரிட்ஜ் பகுதிக்கு வரும் பயணிகள் இங்கு வருடம் முழுதுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மலர்க்கண்காட்சியையும் தவறவிடக்கூடாது. இங்கு பல்வேறு வண்ணமயமான மலர்கள் ஒரு அழகிய கண்ணாடி கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்தின்போது ஆர்க்கிட் மலர்க்கண்காட்சியுடன் துவக்கி வைக்கப்படும் இந்த மலர்க்கண்காட்சி வருடம் முழுதும் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கும்படியாக நீடிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications