ஜாவ்கடா பேஹ்ராம்பூரில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் ஒரு பழமையான கோட்டையின் சிதைவுகளும் உள்ளன.
மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்த சில கற்பதிவுகளும் இங்கே காணப்படுகின்றன. ருஷ;குல்யா நதியின் கரையில் இருக்கும் ஜாவ்கடா, ருஷ;குல்யா பள்ளத்தாக்கு நாகரிகம் பற்றிய பல்வேறு சான்றுகளை கொண்டிருக்கிறது.
செவ்வக வடிவத்தில் இருக்கும் இந்த கோட்டையின் சிதைவுகளில், பல்வேறு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கோட்டையின் சுவர்கள் மற்றும் கோபுரங்களை கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்ணை இப்பொழுதும் காண முடியும்.
இங்கே கற்களில் செதுக்கப்பட்டுள்ள சில சிற்பங்கள் இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில் தான் புகழ் பெற்ற கோவிலான காலேஸ்வர் மற்றும் ராமேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவ பெருமானும், மகா விஷ;ணுவும் காட்சியளிக்கும் அரிய காட்சியையும் பக்தர்கள் காண முடியும்.



Click it and Unblock the Notifications