சாட்ராபூரில் இருந்து 37 கிமீ தொலைவிலும், பெஹ்ராம்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மகுரி கலுவா கோவில் உள்ளது. மகுரி கலுவா தேவியை வணங்கிய மன்னர் ஆட்சி செய்த நாட்டின் பெயர் மகுரி ஆகும்.
இங்கு விளங்கி வரும், நாட்டுப்புற கதைகளின் படி, முதலில் ஒரு குகைக்குள் இருந்த இந்த கோவிலுக்கு அரசரைத் தவிர, சாதாரண மக்கள் யாரும் செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த பெண் கடவுள் பரிசளித்த ஒரு வாள், மன்னரை எல்லா விதமான ஆபத்துகளிலும் இருந்து காத்து வந்தது. ஆனால், ஒரு நாள் இந்த வாளை மன்னர் இழந்து விடவே அவர் பிரிட்டிஷாருடன் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பிறகு, இந்த கடவுளுக்கான கோவில் இப்போதுள்ள மலையின் அடிவாரத்தில் உருவாக்கப்பட்டது. அடர்த்தியான காடுகளுக்கு நடுவே உள்ள இந்த கோவிலில் இருந்தவாறே முடிவற்று நீண்டு சென்று கொண்டிருக்கும் மலைகளைக் காண முடியும்.
முன்பு இந்த கடவுள் இருந்த இடமான குகைக்கு செல்லும் வகையில், படிக்கட்டுகளும் இந்த மலையில் கட்டப்பட்டுள்ளன. இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications