இந்த கோயில் ரத்னகிரியிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கரீபியன் கடற்கரை போன்று காட்சியளிக்கும் கணபதி புலே கடற்கரையில் அமைந்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள இது கணபதிபுலே கோயில் என்றும் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் விசேஷமான அம்சம் என்னவெனில் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானதாக சொல்லப்படுவதாகும். சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் கணபதியின் தாமிரச்சிலையும் இங்குள்ளது. இது கர்ப்பகிருகத்தில் காணப்படுகிறது.
ஒரு மலைக்குன்றின் அருகில் அமைந்துள்ள இந்த கோயிலின் உட்பகுதிகள் வெகு நுட்பமாக கலையம்சத்துடன் வடிவமமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள கடவுள் சிலைகள் கிழக்குத்திசையை நோக்கி இல்லாமல் மேற்குத்திசையை நோக்கியவாறு அமைந்துள்ளன. மேலும் இந்த கோயிலிலுள்ள கணபதி பஸ்சிம் துவார் தேவதா என்றும் அழைக்கப்படுகின்றார்.
இந்த கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் இந்தக்கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்துள்ளது.
இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலின் அருகிலேயே பிரசித்தமான கணபதிபுலே பீச் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications