Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிரிதிஹ் » ஈர்க்கும் இடங்கள் » ஹரிஹர்தாம்

ஹரிஹர்தாம், கிரிதிஹ்

36

ஹரிஹர்தாம் எனும் இந்த முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலம் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ளது. ஹரிஹர்தாம் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் 65 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது.

25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் வளாகத்தை சுற்றி ஆறு ஒன்றும் ஓடுகிறது. இங்குள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்தை கட்டி முடிக்க 30 வருடங்கள் பிடித்துள்ளது.

ஷ்ரவண் பூர்ணிமா தினத்தன்று நாடெங்கிலுமிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். சுற்றுலாப்பயணிகளை பொறுத்தவரையில் வருடமுழுதுமே இந்த பிரம்மாண்ட சிவலிங்க அமைப்பை தரிசிக்கும் ஆவலில் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிந்து ஐதீகங்களின்படி சிரவண மாதத்தின் பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. நாகபஞ்சமி திருநாளும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுவதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளும் அதிகமாக இங்கு நடத்தப்படுகின்றன.

கிராண்ட் டிரங்க் சாலை இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள பகோதர் எனும் சிறு நகரம் வழியாக செல்கிறது. இந்த பகோதர் எனும் இடம் மேற்கு கிரிதிஹ் மாவட்டத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri