கிர்னார் வானிலை

வெப்ப சீதோஷ்ண நிலையை கொண்ட கிர்னார், குளிர் காலத்தில் கடுமையான குளிராகவும் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பமாகவும் இருக்கும். வருடம் முழுவதும் தட்ப வெப்ப நிலை உச்சத்திலேயே காணப்படும்.

கோடைகாலம்

இந்த வட்டாரத்தில் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடைக்காலம் நீடிக்கும். தட்ப வெப்ப நிலை அதிகமாக இருப்பதாலும் வானிலை வறட்சியாக இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் இந்த காலத்தில் இங்கு வருவது நல்லதல்ல. இக்காலத்தில் தட்ப வெப்ப நிலை 44 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் கிர்னாரில் மிதமான மழைப் பொழிவு இருக்கும். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் இங்கு மழைக்காலம். இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வரலாம். ஆனால் மழைக்காலம் என்பதால் மலை ஏறுவதற்கு சற்று சிரமமாக இருக்கலாம்.

குளிர்காலம்

இங்கே குளிர் காலம் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதுவே கிர்னார் வருவதற்கு உகந்த பருவமாகும்.