குல்மார்க்கிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாமையம் இதுவாகும். இங்கு பேசப்படும் மொழியில் குகேர் என்றால், கோழி என்றும் நாக் என்றால், பாம்பு என்றும் பொருள் இச்சொற்களிலிருந்து இவ்விடத்திற்கான பெயர் உருவானதாக கொள்ளலாம்.
கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம், மீன்கள் நிறைந்த நீரோடைகள், தோட்டங்கள், நன்னீரூற்றுக்கள் போன்றவற்றால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ்பெற்றது.
குகேர்நாக்கில் உள்ள நீரூற்றுக்களிலிருந்து பெறப்படும் தண்ணீர் மருத்துவ குணங்கள் கொண்ட்து என்றும், அஜீரணத்திற்கு சிறந்த மருந்து என்றும் நம்பப்படுகிறது.
இந்த தண்ணீர் பசியையும் தாகத்தையும் தணிக்கும் வல்லமைபெற்றது என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குகேர்நாக்கிற்கு அருகில் உள்ள சில ஊர்கள், டாக்சம், சாகம், வாங்கம், ஹங்கல்குண்ட், சலேர்கம் ஆகியவை ஆகும்.



Click it and Unblock the Notifications