Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள் » மாகம்

மாகம், குல்மார்க்

54

புத்காம் மாவட்டத்தில், குல்மார்க்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாகம் என்னும் இட்த்திற்கு, ஸ்ரீநகர் குல்மார்க் சாலை வழியாக சென்றடையலாம். 1569 அடி உயரத்தில் அமைந்துள்ள மாகம், இப்பகுதியிலுள்ள சந்தைகளிலேயே அதிகம் மக்கள் கூடும் சந்தை எனக் கருதப்படுகிறது.

இந்நகரத்தில், உள்ள மக்கள் தொகையில் 60 %  ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களாவார். 1985 ஆம் ஆண்டு இங்கு உருவாக்கப்பட்ட இதாரா அபுல் ஃபசலப்பாஸ் இஸ்லாமிக் நூலகமானது ஏராளமான இஸ்லாமிய நூல்கள், குறுந்தகடுகள், ஒலிப்பேழைகள் மற்றும் இலக்கியங்களைக் கொண்டது எனப் புகழப்படுகிறது.

காஷ்மீரிலுள்ள தனியார் இஸ்லாமிய நூலகங்களில் மிகப்பெரியதென கருதப்படும் இந்நூலகம் ஏராளமான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவ நன்கொடைகள் மூலம் நிதி திரட்டும் பணியினையும் இந்நூலகம் செய்து வருகிறது.

மாகம் நகருக்கு அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாஸோம் இரயில்வே நிலையம் ஸ்ரீநகரிலிருந்து குல்மார்க் செல்லும் நான்கு வழிச் சாலையின் நடுவே அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue