குண்டூர் நகரத்தில் விமான நிலையம் இல்லை. 96 கிலோமீட்டர் தொலைவில் விஜயவாடாவில் உள்நாட்டு விமான நிலையம் இருக்கிறது. அதோடு 250 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, பெங்களூர், மற்றும் சென்னை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், பல வெளிநாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து டாக்சி மூலம் நான்கரை மணி நேர பயணத்தில் குண்டூர் நகருக்கு வரலாம்.