Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குண்டூர் » வானிலை

குண்டூர் வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட மாதங்கள் குண்டூர் நகரத்தில் சுற்றுலா மேற்கொள்ள மிகவும் உகந்தவையாக விளங்குகின்றன. இம்மாதங்களில் மிதமான வெப்பம் நிலவுவதால் வெளிச்சுற்றுலாவுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. மாலை மற்றும் இரவுகளில் குளுமை அதிகமாக இருக்கும் மெலிய குளிர் அங்கிகள் மற்றும் உடுப்புகள் தேவைப்படலாம்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் குண்டூர் பகுதியில் மிகக் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் ஈரப்பதம் நிலவுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாத இறுதி வரை நீள்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மிக அதிகமாக 42° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே குண்டூர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள கோடைக்காலம் ஏற்றதாக இல்லை .

மழைக்காலம்

குண்டூர் நகரத்தில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. வெப்பமண்ட பருவநிலையை கொண்டுள்ளதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமழைப்பொழிவும் இருக்கக்கூடும். மழைக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை 33° C வரை குறைந்து இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

குண்டூர் பகுதியில் டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாத இறுதி வரை நீடிக்கிறது. ஜனவரி மாதத்தில் குளிர் சற்று கூடுதலாகவும் இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் குண்டூர் பகுதி மிதமான குளிருடன், சராசரியாக 25° C வெப்பநிலையுடன் காணப்படுகிறது. மாலை நேரத்திலும் இரவிலும் அதிகக்குளுமை நிலவினாலும் தாங்க முடியாத குளிர் நிலவுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.