Search
  • Follow NativePlanet
Share

குஷைனி – தூண்டில் மீன்பிடிப்புக்கேற்ற அற்புத மலைப்பிரதேசம்

7

குஷைனி எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம்  ஹிமாச்சல் பிரதேசத்தின் தீர்த்தன் பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. டிரௌட் மீன் வகைகள் அதிகம் கிடைப்பதால் இது ‘டிரௌட் கன்ட்ரி’ என்றே பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.

கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் அல்லது GHNP என்று அழைக்கப்படும் தேசியப்பூங்கா குஷைனியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குஷைனி பகுதியில் முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.

1171 கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இந்த தேசியப்பூங்காவில் 30 வகையான பாலூட்டி விலங்குகளும் 300 வகையான பறவைகளும் வசிக்கின்றன.

குஷைனிக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ஷோஜா எனும் அழகிய கிராமத்திற்கு விஜயம் செய்யலாம். இங்கு பல பழத்தோப்புகளும், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியும் உள்ளதால் நடைப்பயணம் செய்து இயற்கை எழிலை ரசிக்க ஏதுவாக உள்ளது.

குஷைனி ஸ்தலத்தை தனியார் கார்கள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக சென்றடையலாம். டெல்லியிலிருந்து குஷைனி செல்வதற்கு 15 மணி நேரம் பிடிக்கலாம்.

இந்த ஸ்தலத்திற்கு செல்லும் சாலைகள் செங்குத்தான மலைப்பாதை என்பதால் அனுபவமிக்க ஓட்டுனர்கள் மட்டுமே வாகனங்களை இதில் இயக்க முடியும். அடிக்கடி மண் சரிவு நிகழும் பிரதேசம் இது என்பதால் பயணச்சிரமங்களுக்கான சகலவித முன் தயாரிப்புடனும் செல்வது சிறந்தது.

குல்லுமணாலி அல்லது புந்தர் விமான நிலையம் குஷைனிக்கு அருகிலுள்ள உள்நாட்டு விமானநிலையமாக அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி, சண்டிகர், பதான்கோட், தரம்ஷாலா மற்றும் சிம்லாவுக்கு விமான சேவைகள் உள்ளன. குஷைனிக்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் டெல்லியில் உள்ளது.

சண்டிகர் ரயில் நிலையம் அருகில் அமைந்திருப்பதுடன் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இணைப்பு சேவைகளையும் கொண்டுள்ளது. மேலும், சண்டிகர், குல்லு மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலிருந்து குஷைனிக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

குஷைனி சிறப்பு

குஷைனி வானிலை

சிறந்த காலநிலை குஷைனி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குஷைனி

  • சாலை வழியாக
    வாடகைக்கார்கள் மற்றும் கேப்கள் போன்ற தனியார் வாகனங்கள் மூலம் குஷைனி சுற்றுலாத்தலத்தை பயணிகள் அடையலாம். டெல்லியிலிருந்து குஷைனி வருவதற்கு 15 மணி நேரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    குஷைனிக்கு அருகில் ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இதுதவிர சண்டிகர் ரயில் நிலையமும் குஷைனிக்கு அருகில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் குஷைனியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    குல்லு அல்லது குல்லுமணாலி விமான நிலையம் என்று அழைக்கப்படும் புந்தர் விமான நிலையம் குஷைனி ஸ்தலத்துக்கு அருகில் 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து டெல்லி, சண்டிகர், பதான்கோட், தரம்ஷாலா மற்றும் சிம்லாவுக்கு விமான சேவைகள் உள்ளன. குஷைனிக்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் டெல்லியில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed