குவஹாத்தி நகரத்தில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் இந்த நகரத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளுக்குமான விமான போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது. இங்கிருந்து நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. பாங்காக் மற்றும் பாரோ போன்ற சில குறிப்பிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கும் இது விமான சேவைகளை கொண்டிருக்கிறது.