தான்சேன் கல்லறை என்றும் இது அழைக்கப்படுகிறது. குவாலியரின் மிகப்பிரசித்திபெற்ற நினைவுச்சின்னம் இதுவாகும். தான்சேன் மற்றும் அவரது குருவான முகம்மது கவுஸ் ஆகிய இருவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தான்சேன் அக்பரது அரசவையில் புகழ்பெற்ற பாடகராக இருந்தவர். அவர் இந்துஸ்தானி இசையில் வல்லுநர். அக்பரது அரசவையில் இடம்பெற்றிருந்த நவரத்தினங்கள் என்னும் முக்கியமான ஒன்பது பேரில் ஒருவர். கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
முகம்மது கவுஸ் என்ற சூஃபி துறவி இவரது குரு ஆவார். தான்சேனும் சூஃபி சமயத்தினைப் பின்பற்றினார். தான்சேன் 'மேக மல்லாரி' ராகத்திலமைந்த பாடல்களைப் பாடியபொழுது, மழை பொழியத்தொடங்கியது என்று செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.
தான்சேன் நினைவிடமானது முகலாயக் கட்டிடக்கலை நுணுக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இங்கு பெருமைமிக்க தான்சேன் இசைவிழா கொண்டாடப்படுகிறது. அதில் நாடெங்கிலிருந்தும், பெரிய இசைவல்லுநர்கள் கலந்துகொள்வார்கள்.



Click it and Unblock the Notifications