சாஸ்-பஹு கோவிலானது குவாலியர் கோட்டைக்குக் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தி மொழியில் சாஸ் என்றால் மாமியார் என்றும் , பஹு என்றால் மருமகள் என்றும் அர்த்தம். அதன்படி இக்கோவிலின் பெயர் மாமியார்-மருமகள் கோவில் என்று பொருள்தரும்.
ஆனால் இக்கோவிலுக்கு இப்பெயர் வந்த உண்மையான காரணம் அதுவல்ல. மகாவிஷ்ணுவின் மற்றொரு பெயர் சாஸ்த்ரபஹு என்பதாகும். இப்பெயரை அடிப்படையாகக் கொண்டுதான் இக்கோவிலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
எனவே இக்கோவில் ஒரு விஷ்ணு கோவிலாகும். இக்கோவிலின் கதவுகளில், பிரம்மன், விஷ்ணு மற்றும் சரசுவதி ஆகிய தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
உள்ளே இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று சிறியது. மற்றொன்று பெரியது. இக்கோவில் செம்மணல் கற்களால் ஆனது. இதில் ஒரு அழகிய தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் உள்பகுதியில் எவ்வித வளைவும் இன்றி ஒரு பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கச்வாஹா வம்சத்தைச் சேர்ந்த மன்னன் மகிபாலனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications