குவாலியர் கோட்டைக்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரிதான் சூரக் குண்ட் ஆகும். கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் சூரஜ் சென் என்பவரோடு தொடர்புடைய செவிவழிக்கதை ஒன்று உண்டு.
மன்னர் சூரஜ் சென் தொழு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். அவர் அதிர்ஷ்டவசமாக குவாலிபா என்றழைக்கப்பட்ட துறவியை இக்கோட்டைக்கு அருகில் சந்தித்தாராம். அத்துறவி மன்னரிடம் அந்த ஏரியிலிருந்து சிறிது தண்ணீர் எடுத்துக் குடிக்குமாறு கூறினாராம்.
அவர் கூறியதுபோலவே மன்னர் சிறிது தண்ணீரை எடுத்துக்குடிக்கவே, அவரது தொழுநோய் முற்றிலும் குணமாகிவிட்டதாம். எனவே அம்மன்னர் இந்நகரத்துக்கு அத்துறவியின் பெயரைச் சூட்டினார்.
அதிலிருந்து இந்நகரம் குவாலியர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மன்னர் தண்ணீர் குடித்த ஏரி மன்னருடைய பெயரால் சூரஜ் குண்ட் என்றழைக்கப்படுகிறது. இந்த அழகான கதையும், அழகிய ஏரியும், பிரம்மாண்டமான கோட்டையும் இவ்விடத்தை அழகிய சுற்றுலாத்தலமாக ஆக்கியுள்ளன.



Click it and Unblock the Notifications