ராம்செளஹர மந்திர் ஹஜிபுர் சுற்றுலாவின் மிக முக்கிய சுற்றுலா இடமாகும். இந்த ராமர் கோவிலானது ராமர், ஜானக்புர் செல்லும் வழியில் இந்த நகரத்தில் தங்கியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
ராமருடைய பாதத் தடம் பதிந்துள்ள இடத்தில் இந்தக் கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது. புராண நம்பிக்கைகளின் படி ராமருக்கு இங்குதான் முதல் மொட்டை அடிக்கப்பட்டது.
இங்கு ராம நவமி திருவிழாவானது மிகவும் விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகின்றது. விழாவினைத் தொடர்ந்து இங்கு நடைபெறும் சந்தை மிகவும் புகழ்பெற்றது.
புனித தன்மை வாய்ந்த இந்த இடத்தில் "பாரி சங்கட்" மற்றும் "சோட்டி சங்கட்" என்கிற இரு இடங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் இந்த இரு இடங்களும் சாதுக்கள் மற்றும் துறவிகளால் பிரார்த்தனைக்காகன இடங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications