Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹலேபீடு » ஈர்க்கும் இடங்கள் » சந்தளேஷ்வரர் கோயில்

சந்தளேஷ்வரர் கோயில், ஹலேபீடு

16

பயணிகள் ஹலேபீடு ஸ்தலத்தில் பார்க்க மற்றொரு முக்கியமான கோயில் இந்த சந்தளேஷ்வரர் கோயில் ஆகும். இங்கு பலவிதமான சிலைகள் வரிசையாக அடுத்தடுத்து அமைந்துள்ளன. சந்தளேஷ்வர கடவுள் மற்றும் ஹொய்சளேஷ்வர கடவுளுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிழக்குத்திசையை நோக்கியதாக காணப்படும் இந்த ஒரு உயரமான பீட அமைப்பின்மீது உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகள் சோப்புப்பாறை எனப்படும் மிருதுவான கல்லால் உருவாக்கப்பட்டவையாகும். ஹொய்சள மன்னரான விஷ்ணுவர்த்தனின் மனைவி சந்தளாதேவியின் ஆக்ஞைப்படி இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கோயிலின் கருவறையானது நட்சத்திர வடிவமைப்பை கொண்டதாகவும், சுகநாசி (கோபுர வாசல்), நவரங்க மண்டபம், நந்தி மண்டபம் போன்றவற்றை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தளேஷ்வரர் கோயிலில் ஒரு சிவலிங்கமும் உட்புறத்தில் நுட்பமான சிற்பவடிப்புகளையும் காண முடிகிறது.

கோயிலின் வெளிப்பகுதியிலும் பல கற்சிற்பங்களை காணமுடிகிறது. இங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றையும் பயணிகள் பார்க்கலாம். இதில் வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களும் பல புராதன சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு கடவுள் சிலைகளும் மற்ற மானிடர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue