Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஒகேனக்கல் » வானிலை

ஒகேனக்கல் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையான காலம் ஒகனேக்கல் பகுதிக்கு விஜயம் செய்து ரசிக்க  ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் ஆறு வறண்டும் காணப்படுவதில்லை, கரைபுரண்டும் ஓடுவதில்லை. எனவே படகு மற்றும் பரிசல் சவாரி போன்ற பொழுது போக்குகளில் ஈடுபட வசதியாக உள்ளது. மேலகிரி மலையில் மலையேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இக்காலம் ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கோடைக்காலத்தில் ஒகனேக்கல் பகுதியில் வெப்பமாக்க இருந்தாலும் சுட்டுப்பொசுக்கும் உஷ்ணம் நிலவுவதில்லை. மார்ச் முதல் மே வரை நீடிக்கும் இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 24°C முதல்  34°C வரை காணப்படும். பெரும்பாலும் பயணிகள் கோடைக்காலத்தில் ஒகேனக்கல்லுக்கு விஜயம் செய்வதில்லை.

மழைக்காலம்

ஒகனேக்கல் பகுதியில் மழைக்காலம் ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது.  ஆற்றுப்பகுதியை ஒட்டிய மலைக்கிராமம் என்பதால் இப்பருவத்தில் இயற்கை காட்சிகள் நிரம்பி வழிகின்றன. கரை புரண்டோடும் காவிரி ஆறும், சுற்றிலும் பசுமைபோர்த்திய வனப்பகுதியும் மழைக்காலத்தில் ஒகேனக்கல் பகுதி இயற்கை ரசிகர்களின் சொர்க்கமாக ஒளிர்கிறது. இருப்பினும் போக்குவரத்து மற்றும் இதர அசௌகரியங்கள் கருதி மழைக்காலத்தில் பயணிகள் அதிக இப்பகுதிக்கு விஜயம் செய்வதில்லை.  

குளிர்காலம்

குளிர்காலத்தில் ஒகனேக்கல் பகுதி ரசிக்கக்கூடிய இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கின்றது.   இக்காலத்தில் 13°C முதல்  27°C வரையான வெப்பநிலை காணப்படுகிறது. காட்சியளிக்கிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் இக்காலத்தில் ஒகனேக்கல் பரபரப்பான சுற்றுலாத்தலமாக மாறிவிடுகிறது.