ஹொன்னேமரடு சுற்றுலாப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் பாஜ்பே விமான நிலையம் அமைந்துள்ளது. இது ஹொன்னேமரடு பகுதியிலிருந்து 225 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய நகரங்கள் வரை விமான சேவைகளை பெற்றுள்ளது. இது தவிர பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஹொன்னேமரடு ஸ்தலத்திலிருந்து 380 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்திய பெருநகரங்கள் மற்றும் அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன.