Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹௌரா » வானிலை

ஹௌரா வானிலை

கோடைகாலம்

ஹௌரா நகரம் கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 37°C  வரை அதிகபட்சமாக வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.  குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அதீத வெப்பம் நிலவுகிறது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் கடற்கரைப்பிரதேச பருவநிலை இயல்புடன் ஹௌரா நகரம் காட்சியளிக்கிறது. அதிகமான காற்று வீச்சு இக்காலத்தில் காணப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

குறைந்தபட்ச வெப்பநிலையாக 10°C  வரை நிலவும் குளிர்காலத்தின் போது ஹௌரா நகரம் இனிமையான சூழலுடன்  காட்சியளிக்கிறது.  அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி இறுதி வரை இங்கு குளிர் காலம் நிலவுகிறது.