ஹுப்ளிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் காயத்ரி தபோவண் எனும் இந்த ஆன்மீக மையத்துக்கும் விஜயம் செய்வது நல்லது. இங்கு நடத்தப்படும் ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு இது பெயர் பெற்றுள்ளது. முதலில் ‘நவகல்யாண மடம்’ என்று அறியப்பட்ட இந்த மையம் தற்போது ‘தபோவண்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஷீ குமார் மஹரிஷி என்ற புகழ் பெற்ற ஆன்மீக குருவால் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு இனங்களைச் சேர்ந்த பக்தர்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்கக் கூடுவது வழக்கம். அவரது மரணத்துக்குப்பின் அவருடைய சீடர்கள் தம் குருவின் உன்னத பாரம்பரியத்தை இந்த மையத்தின் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications