இந்திரா கண்ணாடி மாளிகைப் பூங்காவிற்கு விஜயம் செய்து அங்கு நடைபெறும் மலர்க்கண்காட்சியை காண்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு அனுபவமாகும். மறைந்த இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ஸ்தலம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.
இந்த கண்ணாடி மாளிகை அமைப்பானது முக்கியமான ஒவியக்கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற மையமாக விளங்குகிறது. மேலும் இந்த பூங்காத்தோட்டம் பெங்களூரிலுள்ள லால் பாக் பூங்காவைப்போன்றே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சறுக்கு விளையாட்டு மைதானத்தையும் கொண்டுள்ள இந்த பூங்காவில் பசுமையான புல்தரைகள் கவர்ச்சியுடன் காணப்படுகின்றன.இந்த இந்திரா காந்தி கண்ணாடி மாளிகையானது பல முக்கியஸ்தர்களை கௌரவப்படுத்தும் ஸ்தலமாகவும் விளங்கியிருக்கிறது. இந்தப்பூங்காவைச் சுற்றிப்பார்க்கும் பயணிகள் ‘ஹ்யூமர் கிளப்’ அங்கத்தினர்கள் காலை நேரத்தில் சிரிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதைக்காணலாம். ஹூப்ளி நகராட்சியிடம் இந்தப் பூங்காவை பரமாரித்து நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications