ஹூப்ளி நகரில் ஆஞ்சநேய கடவுளுக்காக அமைந்துள்ள இந்த ஹனுமான கோயில் ஆன்மீக ஆர்வம் உள்ள சுற்றுலாப் பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒரு அம்சமாக உள்ளது. இந்த பிரதேசத்து பக்தர்களால் பூஜிக்கப்படும் ஒரு முக்கிய கோயிலாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கோயிலில் புகழ் பெற்ற யோகி ஷீ வியாஸ்ராஜ் அவர்களால் மறுபிரதிஷ்டை செய்யப்பட்ட பழைய ஆஞ்சயநேய விக்கிரகத்தை பக்தர்கள் காணலாம். தற்சமயம் இந்த விக்கிரகம் தேசாய் குடும்பத்தாரால் பராமரிப்பு பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
ஹனுமானுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். தற்சமயம் இந்த கோயிலும் அதைச்சுற்றியுள்ள ஸ்தலமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications