கங்கேர்காட்டி நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா ஜக்தல்பூருக்கு அருகில் சத்திஸ்ஹர் மாநிலத்தின் முக்கியமான தேசியப்பூங்காவாக அமைந்திருக்கிறது. சாலை இணைப்பு வசதிகள் நல்லமுறையில் உள்ளதால் ஜக்தல்பூரிலிருந்து மிகச்சுலபமாக இந்த பூங்காவுக்கு வரலாம்.
இப்பகுதியில் ஓடும் கங்கேர் ஆற்றின் பெயராலேயே இந்த பூங்கா அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பூங்காவின் மையப்பகுதியில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காக இந்த ஆறு ஓடுகிறது.
இப்பகுதியிலுள்ள இயற்கை வளம் மற்றும் பல்லுயிர்ச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1982ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இந்த பூங்கா வளாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications