ஜாகேஷ்வர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மிகப் பழம்பெருமை வாய்ந்த கோவில் ஸ்ரீ மஹாமிருத்துஞ்சாய மகாதேவ் கோவில். கிழக்கு நோக்கி அமைவு பெற்றிருக்கும் இத்தலத்தில் இந்து மதக் கடவுளான சிவன் சிவலிங்கவடிவில் மரணத்தை தடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
தனித்தன்மை மிக்க இந்த கோவிலின் சிவலிங்கத்தில் கண் வடிவிலான பிளவு கூடுதல் சிறப்பு. மஹாமிருத்யுஞ்ஜயத்தின் மந்திரத்தை சொன்னால் ஒரு மனிதனின் எல்லா வகையான தீமைகளையும், நோய்கள், பயம், போன்ற அனைத்து உபாதைகளையும் சிவன் தீர்த்து விடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Click it and Unblock the Notifications