மேகாலயாவின் ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் உள்ள லாஸ்கீய்ன் ஒன்றியத்தில் உள்ள லூக்ஸி என்ற கிராமத்தில் லூக்ஸி பூங்கா உள்ளது. இது மாவட்டத் தலைநரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த பூங்காவை வளர்க்கும் பொருட்டாக, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் உதவியுடன் சாலைகளை அமைத்துள்ளது. இங்கிருக்கும் வியூ பாயிண்ட் பகுதிகளில் அவர்கள் நிழற்குடைகள், வேலிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான இடங்கள் ஆகியவற்றை அமைத்துள்ளனர்.
குழந்தைகள் தங்களுடைய நேரத்தை விளையாடி கழிக்கும் பொருட்டாக இங்கே உருவாக்கப்பட்டுள்ள சறுக்கு மற்றும் சுற்று (Slides & Swings) விளையாட்டு அமைப்புகள் அவர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாகவே, நகர வாழ்க்கையின் நரக இன்னல்களிலிருந்து சற்றே விலிகி, நம்முடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ந்திருக்க மிகவும் ஏற்ற இடமாக இந்த பூங்கா உள்ளது.
மேலும், குப்லி ஆற்றங்கரையில் ஒரு பொழுதுபோக்கு மையமும் உள்ளது. உள்ளூர் சேவை நிறுவனமான லூக்ஸி சென்டர் ஸ்கூல் என்ற நிறுவனம் இங்கே படகு போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.



Click it and Unblock the Notifications