மேகாலயாவில் அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் சுற்றுலா பொக்கிஷங்களில் ஒன்றாக டைர்ஸி நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஜோவாய் - ஷில்லாங் பாதையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் தண்ணீர், ஆர்ப்பரிக்கும் வேகத்தில் தண்ணீரை படுவேகமாக தூக்கியடிக்கும் வல்லமை பெற்றதாகும்.
ஒரு வளைவான பாலத்தால் இணைக்கப்பட்டுள்ள இந்த அருவியின் கீழ்ப் பகுதிக்கு செல்ல 200 படிகளில் இறங்க வேண்டும். இவ்வாறு இறங்கி செல்லும் வழியில், பிந்தோர் நெயின் பகுதியில் உள்ள நெல் வயல்களின் அற்புதமான சுற்று வட்டக் காட்சிகளைக் காண முடியும்.
ஷில்லாங்கில் உள்ள எலிபெண்ட் நீர்வீழ்ச்சியைப் போலவே, இந்த நீர்வீழ்ச்சியிலும் தண்ணீருக்கு அருகாமையில் சென்று, அதன் ஆர்ப்பரிக்கும் வேகத்தை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்க முடியும். ஆனால், டைர்ஸி நீர்வீழ்ச்சி, எலிபெண்ட் நீர்வீழ்ச்சியை விட மூன்று மடங்கு உயரமாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம்.
இந்த நீர்வீழ்ச்சி நல்ல வேகத்தில் இருக்கும் மழைக்காலத்தில் இங்கு வருவது சிறந்தது. ஜோவாய் - ஷில்லாங் சாலையில் இருந்து 1 கிமீ தொலைவிலேயே இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு, தாட்லாஸ்கெய்னுக்கு அடுத்ததாக நெடுஞ்சாலையில் இறங்கி நடந்தே சென்று விட முடியும்.



Click it and Unblock the Notifications