ஜோவாயில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள லூம்ஸ்நோங் கிராமத்தில் உள்ள ஊம்லாவான் குகை சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் நின்று இரசித்து செல்லும் இடமாகும்.
பல காலங்களுக்கு வெளி உலகத்தின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்டு வந்த இந்த குகை சமீபத்தில் முறையான ஆய்வு செய்யப்பட்டு, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள குகைகளிலேயே மிகவும் ஆழமானது என்பதோடு மட்டுமல்லாமல், நீளமானது என்றும் அறியப்பட்டது.
ஊம்ஸ்கோர் மற்றும் கோட்-சடி ஆகிய இரண்டு குகைகள் ஊம்லாவான் குகையுடன் இணைவதால், இந்த குகை மொத்தம் 21 கிமீ நீளமுள்ள குகையாக உள்ளது.
இந்த குகையிலிருந்து 60 கிமீ சுற்று வட்டாரத்தில் வேறு சில குகைகள் இருந்தாலும், அவை இன்னும் முழுமையாக பார்க்கப் படவில்லை. தனியாக சென்று தங்களுடைய சாகசத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு, இது பழம் நழுவி பாலில் விழுந்த நிகழ்வு போன்ற வாய்ப்பாக உள்ளது.
மழைக்காலங்களில் இந்த குகையின் வாயில் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், உள்ளே செல்பவர்கள் நீந்தி மட்டுமே செல்ல முடியும்.
இந்நாட்களில் கிராமவாசிகள் இந்த குகைப்பகுதிகளை துணிகளை துவைக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குகையை ஸ்டாலக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் படிவுகள் அபரிமிதமாக அலங்கரித்துள்ளன. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.



Click it and Unblock the Notifications