‘சன்வார் பால்கி வாலன் கி ஹவேலி’ எனும் பழமையான ஹவேலி மாளிகையின் உள்ளே இந்த அனோகி மியூசியம் அமைந்துள்ளது. இது கையச்சு மற்றும் கைவண்ணக்கலைக்கான மையமாகும்.
ஜெய்ப்பூரின் பாரம்பரியக்கலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு அறக்கட்டளையின் மூலம் இது நடத்தப்படுகிறது. இந்த அரசுசாரா அமைப்பு இத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
கையச்சு வண்ணக்கலை மரபு அழிந்திடாமல் பாதுகாப்பது இந்த அறக்கட்டளையின் பிரதான நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்திலேயே உள்ள விற்பனைக்கூடத்தில் பயணிகள் வாழ்த்து அட்டைகள், நகைகள் மற்றும் ஆடைகள் போன்ற கைவினைப்பாட்டில் உருவான பொருட்களை வாங்கலாம். இங்கு ஒரு காபிக்கூடம் (கஃபே) ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications