கணேஷ் போல், ஜெய்ப்பூர்

ஆம்பேர் கோட்டையில் உள்ள பிரதான அரண்மனைக்குள் அமைந்துள்ள இந்த கணேஷ் போல் 1611ம் ஆண்டிலிருந்து 1667ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் இரண்டாம் ஜெய் சிங் மஹாராஜாவால் கட்டப்பட்டுள்ளது.

ஆம்பேர் கோட்டையின் ஏழு பிரதான வாயில்களில் இந்த கணேஷ் போல் என்ற வாயில் அமைப்பும் ஒன்று. இந்த வாசலானது மன்னர்களுக்கும் ராஜ குடும்பத்தினருக்குமான பிரத்யேக நுழைவாயிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் ராஜகுடும்பத்தினர் அரண்மனை மற்றும் அந்தப்புரத்தினுள் நுழைய வசதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. முகலாய மற்றும் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களின் கூட்டு அம்சங்களை இது பெற்றுள்ளது.

Please Wait while comments are loading...