ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் இந்த வானியல் நோக்குக்கூடம் மற்றும் ஆராய்ச்சிக்கூடம் மஹாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வானியல் ஆராய்ச்சி வளாகம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், “முகலாய ஆட்சியின் இறுதிக்காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி பெற்றிருந்த ஒரு ராஜவம்ச இளவரசரின் படைப்பாக்கம்” என்ற பெருமைக்குரிய விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.
இந்த வானியல் கூடமானது அழகான பளிங்குக்கற்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ‘ராம் யந்திரா’ எனும் நுணுக்கம் வாய்ந்த கருவி மஹாராஜாவின் வானசாஸ்திர அறிவுக்கு சான்றாக திகழ்கிறது.
இது நில உயர அளவுகளை கணக்கிடப் பயன்படுவதாகும். இது தவிர, துருவா, தக்ஷிணா, நரிவல்யா, ரஷிவலயாஸ், சின்ன சாம்ராட், பெரிய சாம்ராட், வானோக்கு பீடம், தீஷா, சின்ன ராம் யந்த்ரா, பெரிய ராம் யந்த்ரா, சின்ன கிரந்தி, பெரிய கிரந்தி, ராஜ் உன்னதம்ஸா, ஜெய் பிரகாஷ் மற்றும் திகந்தா போன்ற கருவி அமைப்புகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதை பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications