14ம் நூற்றாண்டில் ராஜா மஹரவால் காட்ஸி என்பவரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இந்த காட்ஸிஸார் ஏரி ஆகும். இந்த மழைநீர் ஏரி அந்நாளில் இப்பிரதேசத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நீராதாரமாக திகழ்ந்திருக்கின்றது.
இந்த ஏரியின் கரையில் பல சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. பயணிகள் இந்த ஏரிப்பகுதியில் பல புலம் பெயர் பறவைகளையும் காணலாம். பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை நோக்கி செல்லும் பறவைகள் வழியில் இந்த ஏரிப்பகுதியில் சிறிது காலம் தங்கி செல்கின்றன.மேலும், இந்த ஏரிக்கருகில் அமைந்திருக்கும் தில்லோன் வாசல் என்றழைக்கப்படும் முக்கிய சின்னத்தையும் பயணிகள் பார்க்கலாம். சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டிகும் இந்த வாயில் விதான அமைப்பு 1908ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு விஷ்ணு சிலையையும் இதனுள் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications