ராஜபுதன மற்றும் ஐரோப்பிய பாணிகளின் கலவையான கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கும் ஒரு சான்றாக இந்த தர்பார் காத் மாளிகை அமைந்துள்ளது. இது ஜாம்நகரிலுள்ள முக்கியமான வரலாற்றுச்சின்னமாக கருதப்படுகிறது.
ஒரு காலத்தின் ராஜகுடும்பத்தினரின் இருப்பிடமாக விளங்கிய இந்த அரண்மனை 1540ம் ஆண்டில் கட்டப்பட்டு பிற்காலத்தில் புதுப்பித்து விரிவாக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இதில் ராஜபுதன கலையம்சங்களோடு ஐரோப்பிய கலையம்சங்களையும் காணமுடிகிறது.
அற்புதமான அழகோடு காட்சியளிக்கும் இந்த அரண்மனை மாளிகையில் சுவர் ஓவியங்கள், கற்சிற்ப வடிப்புகள், அலங்கார வடிப்புகள் கொண்ட தூண்கள், அலங்கார கண்ணாடிகள் மற்றும் சிலைகள் போன்றவற்றை பார்க்கலாம். இந்த மாளிகை தற்சமயம் பயன்பாட்டில் இல்லாமல் காலியாகவே வைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications