லகோடா ஏரியின் மையத்தில் உள்ள சிறுதீவுப்பகுதியில் இந்த லகோடா அரண்மனை அமைந்துள்ளது. இது லகோடா டவர் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இது பல அரிய வரலாற்றுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.
ஜன் ரண்மல்ஜி எனும் மன்னர் பஞ்ச நிவாரண நோக்கத்துடன் இந்த அரண்மனையை கட்டியுள்ளார். 1834, 1839 மற்றும் 1846ம் ஆண்டுகளில் மழை பொய்த்ததினால் கடும் வறட்சி நிலவிய காலத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் இது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications