1907 மற்றும் 1915ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பிரதாப் விலாஸ் அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய பாணியில் அமைக்கப்பட்ட இந்த மாளிகையை 1968ம் ஆண்டில் ஜாம் சிங் எனும் ராஜ குடும்ப வாரிசு ஒரு இயற்கை பூங்காவாக மாற்றி பலவிதமான உயிரினங்களை இந்த வளாகத்தில் உலாவ விட்டிருந்தார்.
சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பின்னர் இந்த அரண்மனை பொலிவிழந்து தற்போது பாழடைந்து போய் காட்சியளிக்கிறது. இந்த பூங்கா அரண்மனைக்குள் சென்று பார்ப்பதற்கு பார்வையாளர்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.



Click it and Unblock the Notifications