Search
  • Follow NativePlanet
Share

ஜியோலிகோட் -உத்தராகாண்ட்டின் மறைந்திருக்கும் பொக்கிஷம்!

7

நைனிடால் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1219அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுற்றுலாப் பயணிகளை மகிழச் செய்யும் ஜியோலிகோட். நைனி ஏரியின் நுழைவாயிலாக விளங்கும் ஜியோகோட் பட்டாம்புச்சி பிடிப்பதற்கும், பூந்தோட்டம் அமைப்பதற்கும் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சன்னியாசிகளான விவேகானந்தர், ஆரபிந்தோ ஆகியோர் தியானம் செய்ததாக சொல்லப்படும் குமெளனி மலை நகரம் 87ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் நைனி ஏரி, முக்தேஸ்வர், கார்பெட் தேசியப் பூங்கா, ராம்கார்ஹ் மற்றும் பாங்காட் என்னும் சிறிய கிராமம் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாதளங்கள் ஆகும். பேரிக்காய், ப்ளம், பீச் பழங்களின் தோட்டங்கள், பருவ மலர்கள் மற்றும் ஏராளமான வண்ண பட்டாம்பூச்சிகள் நிறைந்த புத்துணர்ச்சி ஊட்டும் பகுதியாக ஜியோலிகோட் விளங்குகிறது.

ஜியோலிகோட்டின் சிறந்த விடுதிகளின் ஒன்றாக கருதப்படும் 'தி காட்டேஜ்'ஜில் இயற்கையின் மடியில் பழ மரங்கள், பருவ மலர்கள் சூழ பயணிகள் தங்கலாம்.

சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் ஜியோலிகோட் விளங்குகிறது. ஜியோலிகாட்டின் அதிகமாக அறியப்படாத இயற்கை சூழலில் பயணிகள் நடைப்பயிற்சியிலும், தாழ்நிலை மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.

ஜியோலிகோட்டில் உள்ள பழங்கால கோவில்கள், கல்லறைகள், வார்விக் சாஹிப் இல்லம் மற்றும் பிற பழங்கால கட்டடங்களைக் காணாவிடில் பயணம் முழுமை பெறாது. தேன் சேகரிப்பு அமைப்பில் தேன் சேகரிப்பு பற்றி பயணிகளுக்கு கற்றுத் தரப் படுகிறது.

இங்கு கிடைக்கும் சுத்தமான தேன் மற்றும் பழங்களை வாங்க பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். கிவி, ஒலிவ பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவை இங்கு மிகச்சிறந்த விலையில் கிடைக்கிறது. மரச்செடிகளும், தொட்டிச்செடிகளும் கிடைக்கின்றன.

ஜியோலிகோட் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலைவழிகளில் சுலபமாக அடையலாம். பாட்னாநகர் விமானநிலையம் ஜியோலிகோட் அருகாமையில் இருக்கும் விமானநிலையமாகும்.

இங்கிருந்து டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்திற்கு விமானசேவைகள் உண்டு. ஜியோலிகோட்டில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கத்கோடம் ரயில்நிலையம். அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து ஜியோலிகோட்டிற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.

ஜியோலிகோட் சிறப்பு

ஜியோலிகோட் வானிலை

சிறந்த காலநிலை ஜியோலிகோட்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜியோலிகோட்

  • சாலை வழியாக
    அரசு பேருந்துகளின் மூலமும் ஜியோலிகோட்டை அடையலாம். 6 கிமீ தொலைவில் இருக்கும் நைனிடாலுக்கு டெல்லியில் இருந்து சொகுசுப் பேருந்துகள் மற்றும் கார் வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜியோலிகோட்டில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் கத்கோடம் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை உண்டு. நியாயமான கட்டணத்தில் இங்கிருந்து ஜியோலிகோட்டிற்கு செல்ல தனியார் வண்டிகள் வாடகைக்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பாட்னாநகர் விமானநிலையம் ஜியோலிகோட்டில் இருந்து 56கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. டெல்லிக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. இந்நிலையத்திலிருந்து இலக்கை அடைய தனியார் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue