Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜான்ஸி » ஈர்க்கும் இடங்கள் » சிர்கோன்

சிர்கோன், ஜான்ஸி

22

ஜான்ஸியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பெட்வா நதியோரத்தில் அமைந்துள்ள சிர்கோன் நன்கு அறியப்பட்ட தேசியக் கவிஞரான இந்திக் கவிஞர் மைதிலி ஷரன் குப்தாவின் பிறப்பிடமாகும். அவரது சமாதியும் இக்கிராமத்திலேயே அமைந்துள்ளது.

இந்நகரம் இலக்கிய உலகில் பிரசித்தி பெற்ற இரண்டு பிரமுகர்களின் இருப்பிடமாக விளங்கும் பெருமையும் பெற்றதாகும். இதில் ஒருவர், கவிஞர் பெருமானின் இளைய சகோதரரான சியாராம் ஷரன் குப்தா ஆவார்.

மற்றொருவர் உருதுக் கவிஞரான முன்ஷி அஜ்மீரி ஆவார். குப்தா சகோதரர்கள் இருவரும், முன்ஷி அவர்களை தங்களின் மூத்த சகோதரராகவே பாவித்தனர்.

இந்நகரம் ஒரே வளாகத்தில் அமையப்பெற்ற கோயில் மற்றும் மசூதியைக் கொண்டுள்ளது. இது தர்வாஜா எனப்படும் மூன்று நுழைவு வாயில்களையும், குயில்லா எனப்படும் கோட்டையையும் பெற்றுள்ளது.

இந்நகரில் ஏராளமான புராதனக் குளங்கள் காணப்படுகின்றன. கலெக்டர் கஞ்ச் பகுதியில் அமைந்த, சிவன் கோயிலான ஷிவ்-சாய் கோயில் பக்தர்களை ஈர்க்கும் பிரபல ஸ்தலமாக விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue