ஜான்ஸியின் கோட்டை அல்லது ஜான்ஸி கோட்டை, ஓர்ச்சாவின் ராஜா பிர் சிங் தியோ அவர்களால் 1613 ஆம் ஆண்டில், பாறைகளாலான மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது சுற்றிலும் சுமார் 16 முதல் 20 அடி வரையிலான உயர்ந்த, திடமான, அரண் போன்ற கிரானைட் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.
இச்சுவர்களில் சுமார் 10 நுழைவு வாயில்கள் காணப்படுகின்றன. இந்நுழைவு வாயில் ஒவ்வொன்றும் ஒரு ஆட்சியாளரின் பெயரையோ அல்லது ராஜ்ஜியத்தின் முக்கிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றின் பெயரையோ கொண்டுள்ளது.
இந்நுழைவு வாயில்கள், முறையே சந்த் நுழைவு வாயில், தாட்டியா தர்வாஜா, ஜர்னா நுழைவு வாயில், லக்ஷ்மி நுழைவு வாயில், ஓர்ச்சா நுழைவு வாயில், சாகர் நுழைவு வாயில், உன்னாயோ நுழைவு வாயில், கந்தேராவ் நுழைவு வாயில் மற்றும் சைன்யார் நுழைவு வாயில் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.
கால ஓட்டத்தில், சில நுழைவு வாயில்கள் மறைந்து போய்விட்டாலும், சில நுழைவுவாயில்கள் இன்னும் சிதையாமல் காணப்படுகின்றன.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஜான்ஸி கோட்டை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகுத்துள்ளது.
இக்கோட்டையின் சுற்றுப்புறச்சுவர்கள், யார்க்கும் அஞ்சாத வீராங்கனையான ராணி லக்ஷ்மிபாய், ஆங்கிலேயப் படைகளுடன் நிகழ்த்திய போரின் காட்சிகளை விளக்கும் ஓவியத் தீற்றல்களுடன் காணப்படுகின்றன.
இக்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு காட்சிப் பொருள்கள் மட்டுமல்லாது, எதிராளியை சாகடிக்கக்கூடிய வகையில் நெருப்பைக் கக்கி, ஆங்கிலேயப் படைகளை நடுநடுங்கச் செய்த காரக் பிஜ்லீ என்று அழைக்கப்பட்ட பீரங்கியையும் காணலாம்.



Click it and Unblock the Notifications