கணேசருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கணேஷ் மந்திரில் தான், 1842 ஆம் ஆண்டு ராஜா கங்காதர் ராவுடனான ராணி லக்ஷ்மி பாயின் திருமணம் நடைபெற்றது. மணமாவதற்கு முன் மணிகர்னிகா என்ற பெயரில் பிறந்தகத்தில் அழைக்கப்பட்டு வந்த இவர், திருமணத்திற்குப் பின் ராணி லக்ஷ்மி பாய் என்று முறையாக பெயரிடப்பட்டுள்ளார்.
ஜான்ஸி கோட்டையின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள இந்த அழகிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கணேசர் சிலை, இந்த கோட்டை, அதில் வாழ்வோர் மற்றும் இந்நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்குவதாக நம்பப்படுகிறது.
இது குவிந்த கூரை போன்ற அமைப்புடன் காணப்பட்டாலும், இதன் கட்டுமான பாணியும், தனித்தன்மை வாய்ந்த இதர குணங்களும் இக்கோயில், கோட்டை கட்டப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டதை உணர்த்துகின்றன.
ஜான்ஸி கோட்டையும், கணேசர் கோயிலும் அதன் அக்காலத்தைய பக்தர்களிடம், முக்கியமாக சுதந்திரத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்தவரான ஜான்ஸி ராணியிடம், காணப்பட்ட பராக்கிரமத்தின் சான்றாக விளங்குகின்றன.
கணேஷ் கோயில், கணேச பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில், மன விருப்பத்தோடு வந்து செல்லும் ஓர் ஸ்தலமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications