உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாத் துறையினால், பிப்ரவரி மாதக் கடைசியிலோ அல்லது மார்ச் மாத ஆரம்பத்திலோ ஏற்பாடு செய்யப்படும் ஒரு வார கால இசைத்திருவிழாவான ஜான்ஸி மஹோத்ஸவ், பெருந்திரளான ஆர்வலர்களை அது நடக்கும் இடத்திற்கு வரவழைக்கக்கூடிய பெருமை வாய்ந்ததாகும்.
இந்தத் திருவிழா, இனம், பாரம்பரியம், சமூக பழக்கவழக்கங்கள், சடங்குகள், மத நம்பிக்கைகள், பண்பாடு மற்றும் முக்கியமாக பந்தல்கண்ட் மக்களின் வண்ணமயமான கிராமிய வாழ்க்கை ஆகியவற்றை சிறப்பாக எடுத்துக் கூறி மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளால் நிறைந்து காணப்படும்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மாலை வேளைகளில், தொல்பொருள் அருங்காட்சியகத்தின் அருகாமையில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் நிரல், இப்பகுதியின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் அல்ஹா பாடல்கள் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்.
மேலும், வரிசை கட்டி நிற்கும் போட்டி நிகழ்ச்சிகளான ரங்கோலி, மெஹந்தி டிசைன்கள் மற்றும் ஆயுர்வேத சமையற்குறிப்பின் செயல்முறை போன்றவைகளும் மாநில தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
ஆனால் பெருமளவில் இடம் தேவைப்படக்கூடிய நிகழ்ச்சிகளான பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் கண்காட்சிகள் மற்றும் கைவினைப் பொருட்காட்சிகள் ஆகியன ராணி லக்ஷ்மி பாய் பூங்கா மற்றும் நாராயண் பாக் போன்ற இடங்களில் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications