மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி, உண்மையான சமாதியின் மேல் அல்லாது வேறு இடத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அல்லது போர்ச்சின்னம் ஆகும். இது, தன் கணவரான மஹாராஜா கங்காதர் ராவின் மரணத்துக்குப் பின் ராணி லக்ஷ்மிபாய் அவர்களால் 1853 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கட்டப்பட்டது.
லக்ஷ்மி தல் என்ற குளத்தின் அருகில் அமைந்துள்ள இந்த சாத்ரி, ஜான்ஸி நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சுமார் 150 வருடங்கள் பழமையானதாக இருப்பினும், மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி, காலத்தின் சீற்றங்களைத் தாக்குப்பிடித்து கம்பீரமாக நிற்கின்றது.
இதன் வளைவான கூரைப்பகுதி, கலை வேலைப்பாடுகளுடையனவாய் செதுக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு தூண்களின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமைப்பு, அக்காலத்தில் விளங்கிய நேர்த்தியான கட்டுமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்த சாத்ரி, தன் உணர்வுப்பூர்வமான ஈர்ப்பு சக்தியினால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட பெருங்கூட்டத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
இந்த இடம், அக்கால வீரர்களின், முக்கியமாக பெரும் பராக்கிரமசாலியாக விளங்கிய ராணி லக்ஷ்மி பாயின், சிறந்த நாட்டுப்பற்று ஆர்வம் மற்றும் ஆழமான பயபக்தியை வெளிக்கொணர்வதாக உள்ளது.



Click it and Unblock the Notifications