பரிச்சா என்ற பெயர், ஜான்ஸியில் உள்ள இரு முக்கிய அடையாளங்களைக் குறிப்பதாக உள்ளது. இவற்றுள் ஒன்று, நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்வா நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டைக் குறிக்கின்றது.
ஜான்ஸியிலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்காட் பாலம் வரையில் செல்லக்கூடிய அமைதியான நீரோட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நீர்த்தேக்கம் இங்கு காணப்படுகிறது. இந்த அணைக்கட்டு, தண்ணீர் விளையாட்டுக்களுக்கு; முக்கியமாக படகுச்சவாரி அபிமானிகளுக்கான பிரதான ஸ்தலமாக விளங்குகிறது.
பரிச்சா என்ற பெயர், ஜான்ஸி மாவட்டத்தில், கான்பூர்-ஜான்ஸி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இக்குடியிருப்பு, சுமார் 1140 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மிகப் பெரிய நிலக்கரி மின் நிலையமான பரிச்சா அனல் மின் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள காரணத்தினால், இது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ். எஃப் -இன் பாதுகாப்புக் குடையின் கீழ் உள்ளது.
பரிச்சா குடியிருப்பு, ஒரு கோயில், மசூதி, தேவாலயம் மற்றும் ஒரு புத்த விகாரம் போன்றவற்றின் உறைவிடமாக விளங்குகின்றது.
இது, வழக்கமான பொது சேவைகளான வங்கிகள், பூங்காக்கள், நான்கு வகை கிளப்கள், விருந்தினர் மாளிகை, ஒரு மருத்துவமனை, கல்லூரி மற்றும் பள்ளிகள், குறிப்பாக மஹாராணி லக்ஷ்மிபாய் சரஸ்வதி ஷிஷு மந்திர் மற்றும் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் போன்ற பள்ளிகள் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications