ராணி மஹால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணம், இது இந்தியாவின் பிரசித்தி பெற்ற போர் வீராங்கனை மஹாராணியான, ஜான்ஸி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லக்ஷ்மி பாயின் வசிப்பிடமாக இருந்ததே ஆகும்.
இது நவால்கர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் ரகுநாத் அவர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களான ராணி லக்ஷ்மிபாய் மற்றும் மராத்திய தளபதிகளான தந்த்யா தோப் மற்றும் நானா சாகிப் ஆகியோரின் தலைமையின் கீழ், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற நாட்டுப்பற்றுமிக்க படைகள் கூடும் மையமாக இருந்துள்ளது.
தட்டையான கூரைகளுடன் கூடிய இரண்டடுக்குக் கட்டிடமான ராணி மஹால் ஒரு சதுரமான முற்றத்தின் எதிர்ப்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த முற்றத்தின் ஒரு புறம் கிணறு ஒன்றும் மற்றொரு புறம் நீருற்று ஒன்றும் காணப்படுகின்றன.
இந்த அரண்மனையில், பிரபலமான தர்பார் மண்டபம் உள்ளிட்ட ஆறு மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று இணைவாகச் செல்லும் தாழ்வாரங்களுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் சில சிறிய அறைகளும் காணப்படுகின்றன.
தர்பார் மண்டபத்தின் சுவர்கள் அனைத்தும், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூவேலைப்பாடுகளோடு, பல்வேறு செடி வகைகள் மற்றும் விலங்கினங்களும் வரையப்பட்டு, அலங்காரமாகக் காட்சியளிக்கின்றன.
இப்பெரிய கட்டிடத்தின் பெரும்பகுதி ஆங்கிலேய பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டு விட்டது. இந்த அரண்மனை தற்போது சரித்திர அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்



Click it and Unblock the Notifications