சிக்கிமில்ல் ஓடும் நீளமான நதியான டீஸ்டா நதியின் துணை நதி இந்த ரங்கீத் நதியாகும். மேற்கு சிக்கிம் பகுதியில், இமயமலைகளில், உற்பத்தியாகும் இந்நதி, ஜோர்தாங்க், பெல்லிங்க், மற்றும் லெக்ஷிப் நகரங்களைத் தாண்டி பாய்கிறது.
இது ஒரு வற்றாத ஜீவநதியாகும், கோடைகாலங்களில், இமயமலையிலிருந்து உருகும் பனி மூலமாகவும், மழைக்காலங்களில், பருவமழை மூலமாகவும் இந்நதியில் நீர் எப்போதும் நிறைந்துள்ளது.
மலையிலிருந்து இறங்குவதால், வேகத்துடன் சீறிப்பாய்கிறது. இந்நதியின் சீற்றம் மிதவைப்படகு சவாரி செய்வோருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது எனவே இவ்விடம் மிதவைப்படகு சவாரி செய்வோரின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது.இந்நதியில், தேசிய நீர்மின்சக்திக் கழகத்தின், 60 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications