Search
  • Follow NativePlanet
Share

யும்தாங் - பேரழகால் நம்மை தாக்கும் பள்ளத்தாக்கு!

19

வடகிழக்கு இந்தியப் பகுதியில் அமைந்திருக்கும் சிக்கிம் மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமாக இருப்பது யும்தாங் ஆகும். யும்தாங்கின் அழகினைப் பாராட்டும் வகையில் யும்தாங் "அழகிய மலர்களின் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படுகிறது.

அபரிவிதமான இயற்கை அழகுகளைத் தன்னிலேக் கொண்டிருக்கும் யும்தாங்கை வசந்த காலத்தில் பல வண்ண காட்டு மலர்கள், குறிப்பாக ப்ரைமுலஸ் மற்றும் ரோடோடென்ட்ரான்ஸ் மலர்கள் அலங்கரித்திருக்கின்றன.

இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் யும்தாங்கிற்குச் சென்றால் இந்த மலர்களின் அதிசய வண்ணக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இதைத் தவிர இங்கு பல இதமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

புவியியல் கூறுகள்

யும்தாங் பள்ளத்தாக்கு, வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3,575 மீ உயரத்தில் இருக்கும் யும்தாங், சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 148 கிமீ தொலைவில் உள்ளது.

யும்தாங் பள்ளத்தாக்கைச் சூழ்ந்திருக்கும் சுற்றுலா பகுதிகள்

யும்தாங்கின் மிக முக்கியமான சுற்றுலா பகுதி ஷின்பா ரோடோடென்ட்ரான் பூங்கா ஆகும். சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் இந்த பூங்கா, ஏப்ரல் முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும் 24 வகையான ரோடோடென்ரான் மலர்களைப் பரப்பி வைத்திருக்கிறது.

யும்தாங்கின் வலது பக்கத்தில் ஒரு சூடான நீரூற்றும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பசுமையான சமவெளிகள், அழகான இயற்கைக் காட்சிகள், குளுமையான பைன் மற்றும் வெள்ளி காடுகள், மிக உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். அதோடு இந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டும் பிரபலமாக உள்ளது.

யும்தாங்கிற்கு வடக்கில் 6 கிமீ தொலைவில் ஒரு சிவாலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்கு வருடம் முழுவதும் திருப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் யும்தாங்கிற்கு 16 கிமீ தொலைவில் யுமேசாம்டோங் என்றொரு சுற்றுலாத் தலமும் அமைந்துள்ளது.

யும்தாங் சிறப்பு

யும்தாங் வானிலை

சிறந்த காலநிலை யும்தாங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது யும்தாங்

  • சாலை வழியாக
    பேருந்துகள் மூலம் நேரடியாக யும்தாங்கிற்கு செல்வது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் மாலை 5.30 மணிக்கு முன்பாகவே யும்தாங்க் பகுதிய பனியால் மூடப்பட்டு இருள் படர்ந்துவிடும். எனவே பலரும் காங்டாக்கிலிருந்து யும்தாங்கிற்கு அருகில் இருக்கும் லச்சுங்கிற்கு பேருந்து மூலம் வந்து அங்கு தங்கி பின் யும்தாங் பள்ளத்தாக்கிற்குச் செல்கின்றனர்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    யும்தாங்கிற்கு தொடர்வண்டி வசதிகளும் போதுமான அளவில் உள்ளன. அதாவது யும்தாங்கிற்கு அருகில் சிலிகுரி என்ற பகுதியில் ஜல்பைகுய் என்ற தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு, சென்னை, புதுடில்லி, கவுகாத்தி மற்றும் பல நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் யும்தாங்கிற்கு அருகில் பக்டோக்ரா விமான நிலையும் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat