Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோஷிமத் » வானிலை

ஜோஷிமத் வானிலை

ஏப்ரல் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கக்கூடிய கோடைகாலமே, ஜோஷிமத் நகரை சுற்றிப் பார்க்க சிறந்த காலகட்டம் ஆகும்.         

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): ஜோஷிமத்தில் கோடைகாலம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து ஜூன் மாதம் வரை நீடிக்கும். கோடைகாலத்தின் போது இங்கு காணப்படும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் தலா 34 டிகிரி செல்சியஸாகவும், 12 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜோஷிமத்தில் மழைக்காலம் ஜூலை மாதம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கின்றது. இந்தப் பகுதி, தென்மேற்கு பருவ மழை மூலம் கடும் மழைப்பொழிவைப் பெறுகின்றது. இக்காலகட்டத்தின் போது இரவுகள் மிகவும் குளுமையாக இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): டிசம்பர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில், தேவ்ப்ரயாக் பகுதி கடும் பனிப்பொழிவை சந்திக்கும். இக்காலகட்டத்தின் போது இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 0 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 8 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.