கைலாஸ்ஹஹர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த பச்சைப்பசேல் தோட்டங்களுக்கான சுற்றுலா அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.
இந்தத் தேயிலை தோட்டங்கள் அவற்றின் மயக்கும் அழகிற்கு மட்டும் பெயர் பெற்றதல்ல, இங்குள்ள தேயிலையின் சுவை அதிக தரம் வாயந்ததாக அறியப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சில 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவை. அவற்றுள் சில 1916-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த இடத்தின் மிக முக்கியமான விஷயமாக இங்கு இப்போதும் பாரம்பரிய முறையில் வளர்க்கப்படும் தேயிலையை குறிப்பிடலாம்.
கைலாஸ்ஹஹர் மற்றும் அதனைச் சுற்றியுள்ல தேயிலை தோட்டங்களில் இருந்து தயாரிக்கப்படும் தேயிலைக்கு தனிப்பட்ட குணங்கள் உண்டு. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுகிறது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் இயற்கையான முறையில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேயிலை தோட்டங்களைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் முழுவதும் தேவைப்படாது. எனவே கைலாஸ்ஹஹருக்கு சுற்றுலா வரும் பயணிகள் கைலாஸ்ஹஹரை ஒரு நாளைக்குள் எளிதில் சுற்றிப்பார்க்கும் படி தங்களுடைய பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications